_18494 (1)

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் பைத்தியமாக நடிக்கத்தான் செய்தனர். ஆனால் பார்வையாளர்கள் பலருக்கு பைத்தியம் பிடிக்கும் நிலை ஏற்பட்டது. யார் என்ன செய்கிறார் என்பது புரியவில்லை. இவர்கள் பேசுவது டாஸ்க்கா அல்லது உண்மையா என்று யோசிப்பதற்குள் அடுத்த காட்சி வந்துவிடுகிறது.

குறிப்பாக ஓவியா ஆரவ்விடம் பேசிய காதல் வசனங்கள் பாதி உண்மையாகவும், பாதி டாஸ்க் ஆகவும் எடுத்து கொள்ளலாம். ஆனால் அதே நேரத்தில் ஆரவ் ரொம்ப சீரியஸாகவே பேசியதாக தெரிகிறது.

இந்த நிலையில் ஆரவ்விடம் தனியாக ஐந்து நிமிடம் பேச வேண்டும் என்று ஓவியா அழைத்து பேசிய பேச்சில் இருந்து இருவருக்கும் இடையே ஒரு அன்பு பரிமாறப்பட்டுள்ளது மட்டும் உறுதியாகின்றது. ஆனால் திடீரென ஆரவ், ஓவியாவை விட்டு ஏன் விலகி போக வேண்டும் என்று நினைக்கின்றார் என்பதுதான் புரியவில்லை. ஒருவேளை காயத்ரியின் மூளைச்சலவை காரணமாக இருக்கலாம்.

இந்த உரையாடலில் ‘உன்கிட்டே நான் எந்த மாதிரியும் பழகவில்லை என்று ஆரவ் கூற, அதற்கு ஓவியா ‘பிறகு ஏன் எனக்கு முத்தம் கொடுத்தாய்? என்று கேட்கிறார். அதற்கு ஆரவ், ‘நான் முத்தம் கொடுக்கவில்லை என்று கூற, ‘அப்ப எனக்கு யார் முத்தம் கொடுத்தது என்று ஓவியா திருப்பி கேட்க, ‘அது எனக்கு தெரியாது’ என்று அதிர்ச்சிக்குரிய பதிலை தருகிறார் ஆரவ்

இந்த முத்த விஷயத்தில் ஓவியா பொய் சொல்ல வாய்ப்பே இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஏற்கனவே அவர் உண்மையானவர் என்பது ஜூலி விஷயம் உள்பட பல விஷயங்களில் உறுதியாகிவிட்டது. ஆனால் அதே நேரத்தில் கேமிரா சுற்றி இருக்க பொய் சொன்னால் மீண்டும் ஒரு குறும்படத்தை போட்டு காட்டி கமல் மானத்தை வாங்கிவிடுவார் என்பது யாருக்கு தெரியுமோ, ஆரவ்வுக்கு நன்றாக தெரியும்.

ஆனாலும் நான் முத்தம் கொடுக்கவில்லை என்றும் அவர் உறுதியாக கூறுகிறார். ஒருவேளை அந்த முத்தம் உதட்டு முத்தமாக இருந்தால் யார் யாருக்கு முத்தம் கொடுத்தது என்பது அந்த இருவருக்கு மட்டுமே தெரிந்த உண்மையாக இருக்கலாம். இந்த விஷயத்தில் யார் உண்மை சொல்கின்றார்கள் என்பது முத்தத்திற்கே ஸ்பெஷலிஸ்ட்டான கமல் ஒரு குறும்படத்தை போட்டு விளக்கினால் மட்டுமே அனைவருக்கும் புரியும்.

ஒரு வேளை அப்படி ஒளிபரப்பினால் கண்டிப்பாக அது 18+ ஷோவாக தான் இருக்கும் என்பது மட்டும் கன்ஃபார்ம். ஆனால், அப்படியான காட்சிகளை ஒளிபரப்பினால் பிக் பாஸ் பார்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் மற்றும் நாடு முழுதும் எதிர்ப்பு கிளம்பும் என்பதை கருத்தில் கொண்டு முடிந்தவரை இதனை தவிர்க்கவே பார்க்கும் அந்த தொலைக்காட்சி.

ஆனால், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஆர்த்தி கணேஷ் இந்த வாரம் சனிக்கிழமை ஆரவ்-வின் லீலைகள் குறும்படம் இருக்கு என்று கூறியுள்ளது மற்றும் வையாபுரி, சினேகன் ஆகியோர் உன் மேல் நியாயம் இருக்கிறது என்று கூரியிருப்பதையெல்லாம் வைத்து பார்க்கும் போது TRP பைத்தியம் காரணமாக ஒரு சில சென்சார்களை செய்து குறும்படத்தை ஒளிபரப்பு செய்து விடுவார்களோ? என்ற எண்ணம் தோன்றுகிறது.

Comments

comments