முன் குறிப்பு  – தலைப்பில் உள்ள கோடிட்ட இடங்களை  ஓவியாவின்    FISH  கொண்டு நிரப்பிக் கொள்ளவும்.

taramani-add-740x431

கற்றது தமிழ், தங்கமீன்கள் ஆகிய   படங்களை  இயக்கிய ராமின் அடுத்தப் படம் தரமணி.

வசந்தபவன் ஹோட்டல் அதிபரின் மகன் வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார்.

அடிக்கடி சரக்கடிக்கும், கெட்டவார்த்தைகள் பேசும் ‘குடும்பப்பாங்கான’ வேடத்தில் நடித்திருக்கிறாராம் ஆண்ட்ரியா.

இவருடைய கதாபாத்திரத்தின் ‘புனிதத்தை’ காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே தரமணி படத்துக்கு ‘A’ சான்றிதழை வழங்கி ‘கெளரவப்படுத்தி’ இருக்கிறது தணிக்கைக்குழு.

அனைத்து வயதினரும் பார்க்கத்தக்க வகையில் ஆண்ட்ரியா சரக்கடிக்கும் காட்சியைக் கொண்ட தரமணி படத்துக்கு தணிக்கை குழு ‘A’ சான்றிதழ் வழங்கியதை நக்கலடித்து தரமணி படத்தின் விளம்பரங்களை வெளியிட்டு புரட்சி செய்தனர்.

அடுத்தகட்டமாக, தரமணி டீசரிலும் ஒரு புரட்சியை செய்துள்ளார் இயக்குநர் ராம்.

தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள அந்த டீசரில் சென்சாரில் அனுமதி மறுக்கப்பட்ட வசனங்கள் வெளிப்படையாக கேட்கும்படியும், சென்சார் அனுமதித்த வசனங்கள் mute செய்யப்பட்டும் உள்ளன.

கதாநாயகிக்கு குடியோ, சிகரெட் பழக்கமோ இருப்பதாக காண்பித்தால் அப்படத்திற்கு ‘A’ சான்றிதழ் தருவதுதான் தணிக்கை குழுவின் போக்காக இருக்கிறது. அதை சுட்டிக்காட்டவே இந்த டீஸர் வெளியிடப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் பின்குறிப்பு வாசித்திருக்கிறது.

சமூகத்தைக் கெடுக்கும் படத்துக்கு இப்படி ஒரு சப்பைக்கட்டு…

இயக்குநர் ராம் கற்றது தமிழ்… எடுப்பதோ தரமணி.

Comments

comments