_18494 (1)

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்களின் வர்த்தக வெற்றியைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

பொன்ராம் – சிவகார்த்திகேயன் வெற்றிக் கூட்டணியின் மூன்றாவது படத்தை பெரிய அளவில் பிசினஸ் பண்ணலாம் என்று கணக்குப்போட்டு, இந்தப் படத்தையும் 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனமே தயாரிக்கிறது.

இது சிவகார்த்திகேயனின் நண்பர் பெயரில் தொடங்கப்பட்ட சிவகார்த்திகேயனின் பினாமி நிறுவனம்.

இப்படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் குற்றாலத்தில் துவங்கியது.

குற்றாலம் பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

கடந்த ஆறாம் தேதி முதல் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் சமந்தா.

படத்துக்குப் படம் தன்னைவிட நட்சத்திர அந்தஸ்து அதிகம் கொண்ட நடிகைகளையே தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் சிவகார்த்திகேயன், ஆரம்பநிலையிலேயே ஹன்சிகாவை தனக்கு ஜோடியாக்கினார்.

தற்போது நடித்து முடித்துள்ள ‘வேலைக்காரன்’ படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக்கிக் கொண்டார்.

இந்த அடிப்படையிலேயே பொன்ராம் இயக்கும் படத்துக்கு சமந்தாவை கதாநாயகியாக புக் பண்ணினார்கள்.

இந்தப் படத்தில் நடிக்க இரண்டு வருடங்களுக்கு முன் அட்வான்ஸ் வாங்கியபோது பரம சாதுவாக இருந்த சமந்தா, இடைப்பட்ட காலத்தில் நாகார்ஜுனாவின் மருமகளாகும் அளவுக்கு ஸ்டேட்டஸில் உயர்ந்துவிட்டார்.

அதனாலோ என்னவோ, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்புக்காக வரும்போதே 8 அடியாட்களையும் அழைத்து வந்திருக்கிறார் சமந்தா.

ஜிம்பாய்ஸ், பவுன்சர்ஸ் என்று நாகரிகமாக சொன்னாலும்… அவர்கள் அடியாட்கள்தான்.

சமந்தாவுக்கு பாடிகார்டாக 8 அடியாட்கள் வந்து இறங்கியதைப் பார்த்ததும் சிவகார்த்திகேயன் அதிர்ச்சியடைந்துவிட்டாராம்.

அந்தப் படத்தின் தயாரிப்பாளரும் அவரே என்பதால், 8 அடியாட்களுக்கும் ஒரு நாள் சம்பளமாக சுமார் 50 ஆயிரம் தண்டம் அழ வேண்டுமா என்று நினைத்தாரோ என்னவோ, என்னத்துக்கு இத்தனை பவுன்சர்ஸ்? நாங்க என்ன உங்களை கடிச்சா திங்கப்போறோம் என்று கமெண்ட் அடித்தாராம்.

அதற்கு சமந்தா சொன்ன பதிலைக்கேட்டதும் சிவகார்த்திகேயன் வாயை மூடிக்கொண்டுவிட்டாராம்.

அப்படி என்ன கேட்டார் சமந்தா?

“வேலைக்காரன் படத்தில் நடிக்கிறப்ப நயன்தாராவும் இதே மாதிரி 8 பவுன்சர்ஸ் கூட்டிக்கிட்டு வந்தாங்களே? நயன்தாரா மட்டும் உசத்தி… நான் மட்டமா?”

சரிதான்… சமந்தா கேட்கிறது ஞாயந்தானே ஞாயமாரே?

Comments

comments