0

நாடு முழுவதும் ஒரே வரி என்ற அடிப்படையில் ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ளது. சினிமா துறையை பொறுத்தமட்டில் 18, 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி போக தமிழக அரசு 30 சதவீதம் கேளிக்கை வரி விதித்துள்ளது. இதற்கு தமிழ் திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதன் வெளிப்பாடாக இன்று முதல் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. தமிழக அரசு நல்ல முடிவு எடுத்தால் மட்டுமே தியேட்டர் வாபஸ் பெறப்படும் என தியேட்டர் அதிபர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரும் தனது எதிர்ப்பை தெரிவித்து உள்ளார். ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், “48 முதல் 58 சதவீதம் வரி என்பது மிகவும் அதிகம், தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள்” என்று கூறியுள்ளார்.

Comments

comments