NTLRG_20170711140009730557

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா, சிம்ரன் மற்றும் பலர் நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் வெளிநாட்டுப் படப்பிடிப்பு கடந்த மாதம் பல்கேரியாவில் ஆரம்பமானது. சுமார் 20 நாட்களாக நடைபெற்ற படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. பல்கேரியாவில் தற்போது 55 டிகிரி வெயில் அடித்துக் கொண்டிருக்கிறதாம்.

சுட்டெரிக்கும் வெயிலில் அனைத்து நட்சத்திரங்களும் கலந்து கொண்டு திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துள்ளது படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும் சில ஐரோப்பிய நாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வருட மத்தியில் ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு விக்ரம் ‘ஸ்கெட்ச்’ படப்பிடிப்புக்குச் சென்றதால் சின்ன இடைவெளி விழுந்தது. ‘ஸ்கெட்ச்’ படப்பிடிப்பை விக்ரம் முடித்ததும், ‘துருவ நட்சத்திரம்’ படப்பிடிப்பை உடனே ஆரம்பித்துவிட்டனர். தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்த பிறகுதான் விக்ரம் ‘சாமி 2′ படத்தில் நடிக்க உள்ளார்.

கௌதம் மேனன் இயக்கி முடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் முடிவடைந்தும் இன்னும் வெளிவராமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

comments