_18494 (1)

சென்னை; 2018-ல் நடிகர் சங்க கட்டடம் திறப்பு விழா நடைபெறும் என நடிகர் விஷால் கூறினார்.
நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொது செயலாளர் விஷால், துணைத் தலைவர் பொன்வண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பு கூட்டம் நடத்தினர்.

இதில் நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் பேசியது :-
. நடிகர் சங்க கட்டிடத்தின் கட்டுமான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. அடுத்தகட்ட பணிகள் நாளை முதல் தொடங்கும். நடிகர் சங்க கட்டட பணிகள் 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் முடிந்து பிரமாண்ட விழாவோடு திறப்பு விழா நடக்கும். எந்த தவறுகளும் நடிகர் சங்க கட்டட பணிகளில் நடக்காது. நடிகர் கமல் தன்னுடைய கருத்தை கூறுவதில் எந்த தவறும் இல்லை. அவருக்கு எந்த பிரச்சனை வந்தாலும் , ஒரு நடிகனாக அவருக்கு பின் இந்த விஷால் நிற்பான்.
ஜி.எஸ்.டி. சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. 120 க்கு மேல் உள்ள டிக்கெட் கட்டணத்திற்கு 28% ஜி எஸ் டி விதிக்க வேண்டும் எனும் கோரிக்கையை மத்திய அரசுக்கு வைத்திருக்கிறோம். தற்போது 100க்கு மேல் 28% வரி பிரிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு நினைத்தால் ஒரே வருடம் அல்லது ஆறு மாதத்தில் திருட்டுத்தனமாக படங்கள் வெளியிடுவதை தடுக்க முடியும். அப்படி அவர்கள் நடவடிக்கை எடுத்தால் அரசுக்கு வருவாயும் அதிகரிக்கும் என்றார் விஷால்.
.

நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன் பேசியது
நடிகர் சங்கத்துக்கு யதார்த்தத்தில் ஏற்கனவே திட்டமிட்டதை விட அதிக பணம் கட்டுமானப் பணிகளுக்குத் தேவைப்படுகிறது. விஷால் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார் எனும் கருணாஸின் குற்றச்சாட்டில் உண்மையில்லை. நாங்கள் அனைவரும் ஒன்றாக இனைந்து தான் பணியாற்றுகிறோம் என்றார்

Comments

comments