NTlrg_20170705115009742109

எந்திரன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் 2.O என்ற பெயரில் இன்னும் பிரமாண்டமாய் உருவாகி உள்ளது. ரஜினி, அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து விஎப்எக்ஸ் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. 2.O படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.
2.O படத்தின் 3டி தொடர்பான பிரஸ்மீட் நிகழ்ச்சியில் சென்னையில் நடந்தது. அப்போது பேசிய லைக்கா நிறுவனத்தின் மூத்த அதிகாரி ராஜூ மகாலிங்கம்…. “2.O படம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது. படத்தில் ஒவ்வொரு துறைக்கும் நிறைய தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். நிச்சயம் 2.O படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை தரும்.
இப்படம் முழுக்க முழுக்க 3டியில் உருவாகியுள்ளதால் 3டியில் வெளியி இருக்கிறோம். ஆகையால் தியேட்டர் உரிமையாளர்கள் முடிந்தளவு 3டி தொழில்நுட்பத்திற்கு மாறுங்கள். திட்டமிட்டபடி படம் 2018, ஜன., 25-ம் தேதி படம் ரிலீஸாகும். கேளிக்கை வரி விஷயத்தில் தமிழக அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும்” என்றார்.

Comments

comments