NTlrg_20170701173217267297

ஜேஎஸ்கே., பிலிம்ஸ் சார்பில் சதீஷ் ஏராளமான படங்களை தயாரித்தும், விநியோகமும் செய்தவர் சதீஷ். இவரது தயாரிப்பில் இப்போது தரமணி, அண்டாவ காணோம் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ்க்கு தயாராக உள்ளன.

இதுகுறித்து சதீஷ் கூறியதாவது, “நான் சினிமா தயாரிக்க வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. 10 சிறந்த இயக்குநர்களை எங்கள் நிறுவனம் மூலம் அடையாளபடுத்தி உள்ளேன். தேசிய விருதும் பெற்றுள்ளோம். சினிமாவில் பல விஷயங்களை சமீபத்தில் அதிகம் கற்றுக் கொண்டேன். எத்தனை தடங்கல்கள் இடையூறுகள் வந்தாலும் சினிமா மீது உள்ள காதல், நேர்மை, ரசனை இருந்தால் மட்டுமே இந்த துறையில் நிற்க முடியும்.

தொடர்ந்து எங்கள் நிறுவனத்தின் மூலம் சிறந்த படங்களை தயாரித்து வெளியிட உள்ளோம். பல கதைகள் வருகிறது. கண்டிப்பாக வருடத்திற்கு இரண்டு மூன்று படங்கள் எடுக்கும் முயற்சியில் உள்ளேன். மிகவும் எதிர்பார்க்கபடும் தரமணி படம் ஆகஸ்ட் 11 ல் வெளியிட திட்டமிட்டுள்ளோம். படம் கண்டிப்பாக மிகப்பெரும் வெற்றியை பெற்று தரும் என்கிறார் சதீஷ்.

Comments

comments