NTLRG_20170715175356673594

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மெரீனா எழுச்சியின்போது அடிக்கடி அடிபட்ட பெயர் ராகவா லாரன்ஸ். பின்னர் அரசியல் ரீதியிலான அவரது பேச்சுகள் எல்லாம் கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. மேலும் தான் நடித்து வந்த படங்களின் பப்ளிசிட்டிக்காவே இப்படி எல்லாம் செய்கிறார் போடுகிறார் என்றும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு லாரன்ஸ் மீடியா வெளிச்சத்திற்கு வந்துள்ளார். சாரதி இயக்கத்தில் ஷாம் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘காவியன்’. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் தெலுங்கில் ‘வாடு ஒஸ்தாடு’ என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது. விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு மோஷன் போஸ்டரை வெளியிட்டார் ராகவா லாரன்ஸ்.

Comments

comments