_18494 (1)

தமிழ்ப் படங்களுக்கும், தெலுங்கு படங்களுக்கும் ஹிந்தியில் டப்பிங் ஆகும் போது கிடைக்கும் வரவேற்பு தற்போது மிகவும் ஆச்சரியப்பட வைக்கிறது. தெலுங்குப் படங்கள் ஹிந்தியில் டப்பிங் ஆகி, யு டியூபில் முழு படமும் வெளியாகும் போது மிகப் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. தெலுங்குப் படங்களுக்குப் போட்டியாக தற்போது தமிழ்ப் படங்களும் நல்ல வரவேற்பைப் பெற ஆரம்பித்துள்ளன.

கடந்த வருடம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யு டியுபில் வெளியான அஜித்தின் ‘வேதாளம்’ திரைப்படம் 1 கோடியே 31 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. அந்த சாதனையை விஜய் நடித்து வெளிவந்த ‘தெறி’ படம் பத்து நாட்களுக்குள்ளாகவே முறியடித்துள்ளது.

ஜுலை 1ம் தேதி யு டியூபில் வெளியிடப்பட்ட ‘தெறி’ ஹிந்தி படம் பத்து நாட்களுக்குள்ளாக 1 கோடியே 50 லட்சம் பார்வைகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. விஜய் நடித்துள்ள ஒரு படத்திற்கு ஹிந்தியில் திடீரென இப்படி ஒரு வரவேற்பு கிடைத்துள்ளது விஜய் ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய்க்கு இப்போது வட இந்தியாவிலும் யு டியூப் மூலம் வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது.

Comments

comments