_L6A2915_11238

யு டியூப், பேஸ்புக் ஆகிய தளங்களில் டீசர்கள், டிரைலர்கள், முதல் பார்வை, மோஷன் போஸ்டர் ஆகியவற்றிற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்துதான் இன்றைய ஹீரோக்களுக்கு அவர்களுடைய ரசிகர்களிடமும், மற்ற ரசிகர்களிடமும் எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கிறது என்பது கணிக்கப்படுகிறது.

இணைய தளங்களில் பதிவேற்றப்படும் மேற்படி விஷயங்களைப் பொறுத்தவரையில் ரஜினி, அஜித், விஜய் ஆகியோருக்குத்தான் எப்போதுமே பெரும் வரவேற்பு இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வரவேற்பை இப்போது தனுஷ் பெற்றுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. தனுஷ் நடித்துள்ள ‘வேலையில்லா பட்டதாரி 2′ படத்தின் டிரைலர், அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ படத்தின் டீசரை விட பார்வைகளின் எண்ணிக்கையில் தாண்டியுள்ளது.

‘விவேகம்’ டீசருக்கு யு டியூபில் இதுவரை 1 கோடியே 71 லட்சம் பார்வைகள் பார்த்துள்ளனர். அதே சமயம், ‘வேலையில்லா பட்டதாரி 2′ டிரைலருக்கு யு டியூபில் 81 லட்சம் பார்வைகளும், ஃபேஸ்புக்கில் 54 லட்சம் பார்வைகளும், தெலுங்கில் யு டியூபில் 51 லட்சம் பார்வைகளும் கிடைத்துள்ளன. மொத்தமாக 1 கோடியே 86 லட்சம் பார்வைகள் கிடைத்து ‘விவேகம்’ டீசரின் சாதனையை மிஞ்சியிருக்கிறது.

அது மட்டுமல்ல ‘விவேகம்’ டீசரை யு டியூபில் டிஸ்லைக் செய்துள்ளவர்கள் மட்டும் 73 ஆயிரம் பேர். ஆனால், ‘விஐபி 2′ டிரைலரை வெறும் 7 ஆயிரம் பேர் மட்டுமே டிஸ்லைக் செய்துள்ளனர்.

அஜித் நடித்து வெளிவரும் படங்களுக்கு தமிழில் மட்டுமே வரவேற்பு உள்ளது. அவருடைய படங்களுக்கு தெலுங்கில் வரவேற்பு கிடையாது. ஆனால், தனுஷ் நடித்துள்ள ‘விஐபி 2′ டிரைலருக்கு தெலுங்கில் கிடைத்துள்ள வரவேற்பு தெலுங்குத் திரையுலகினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

Comments

comments