_L6A0021(1)_11478

‘டீசர், பர்ஸ்ட் லுக், சிங்கிள் டிராக்’ என, விவேகம் படத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளும், கோலிவுட்டை தெறிக்க வைத்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்தில் அஜீத்துக்கு என்ன ரோல் என்ற எதிர்பார்ப்பும் அவரது ரசிகர்களிடம் எழுந்துள்ளது. ஹாலிவுட் படங்களில் வரும் துப்பறியும் நிபுணர் போன்ற வேடத்தில் அஜீத் நடிப்பதாகவும், அவருக்கு வில்லனாக, பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிப்பதாகவும் முதலில் கூறப்பட்டது. ஒருசிலரோ, ‘இல்லை; அஜீத், நெகடிவ் ரோலில் நடிக்கிறார். இது, அவரது ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்’ என்கின்றனர். இந்த படத்தில், அஜீத்துக்கு ஜோடியாக நடிப்பது, காஜல் அகர்வால்.

Comments

comments