0

சென்னை: வரிவிதிப்பிற்கு எதிராக நடிகர்கள் விஜய், அஜித் குரல் கொடுக்காதது வருத்தமளிப்பதாக நடிகர் ஜெயம் ரவி வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் நடந்த திரைப்பட வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய நடிகர் ஜெயம் ரவி : ” பிரச்னைகள் ஏற்படும் போது குரல் கொடுக்க தமிழ் திரையுலகத்தினரிடம் ஒற்றுமையில்லை, வரிவிதிப்பு பிரச்னைக்கு நடிகர்கள் விஜய், அஜித் குரல் கொடுக்காதது வருத்தமளிக்கிறது. இந்த வரிவிதிப்பால் திரையுலகம் மிகுந்த பாதிப்படைந்துள்ளது. ” என கூறினார்.
அதே விழாவில் பேசிய இயக்குநர் விஜய் :” வரிவிதிப்பிற்கு எதிராக திரையங்க உரிமையாளர்கள் ஒன்றிணைந்து போராடியது வரவேற்க்கதக்கது. அதே போல ரசிகர்கள் வேண்டுகோள் படி திரையங்கில் உணவு பண்டங்களின் விலையை குறைக்க வேண்டும். ” என கூறினார்.

Comments

comments