NTLRG_20170711102254439332

புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் விஜய்சேதுபதி, மாதவன் இணைந்து நடித்துள்ள ‘விக்ரம் வேதா’ இந்த மாதம் 7-ஆம் தேதி ரிலீசாக இருந்தது. தியேட்டர் ஸ்டிரைக் காரணமாக பல படங்களின் ரிலீஸ் தேதி குழப்பத்துக்குள்ளானது. அதில் ‘விக்ரம் வேதா’ படமும் அடக்கம்.

இந்நிலையில் ‘விக்ரம் வேதா’ படத்தை வருகிற 21-ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இதற்கிடையில் விக்ரம் வேதாவுக்கு தணிக்கையில் யுஏ கொடுத்ததால் ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது. ரிவைசிங் கமிட் படம் பார்த்து சான்றிதழ் கையில் கிடைக்க சில நாட்களாகும் என்பதை கணித்து 21 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

சுந்தர் சி தயாரிப்பில் ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி கதாநாயகனாக நடித்திருக்கும் ‘மீசையை முறுக்கு’ படமும் இம்மாதம் 21-ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

comments