vip2_640x480_61498400668

தனுஷ் தயாரித்து நடித்து, சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானது. யு டியூப்பில் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பார்த்த டிரைலர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் நடிகர் தனுஷ்.

ரஜினி, விக்ரம், விஜய், அஜித், சூர்யா படங்களின் வரிசையில் தான் நடித்த விஐபி-2 படத்தின் டிரைலரும் சேர்ந்துள்ளதை நினைத்து சந்தோஷத்தில் இருந்த தனுஷ், தற்போது கடும் அப்ஸெட்டில் இருக்கிறார்.

காரணம்… அவருடைய பிறந்தநாளான ஜூலை 28ஆம் தேதி விஐபி-2 படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் போனதுதான். படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிய பிறகும் படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகள் முடிக்காமலும், சென்சாருக்கு படத்தை அனுப்பாமலும் அலட்சியமாக இருந்துள்ளனர்.

கடைசி நேரத்தில் சுதாரித்துக் கொண்டு சென்சாருக்கு படத்தை அனுப்பியதில் ஒருவழியாக விஐபி-2 தமிழ் பதிப்புக்கு சென்சார் சர்ட்டிபிகேட் வாங்கிவிட்டனர். ஆனால் ஹிந்தி டப்பிங் வெர்ஷன் இன்னும் சென்சார் ஆகவில்லை. இதன் காரணமாக விஐபி-2 படத்தை ஒரே நாளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் வெளியிட வேண்டும் என்ற தனுஷின் திட்டம் தவிடுபொடியாகிவிட்டது.

Comments

comments