vishal-varalakshmi-sarathkumar-740x431

பொதுவாக திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளும் பிரமுகர்களும் நிலைய வித்வான்களும் பேசும் பேச்சை கேட்பதுபோல் பெருந்துயரம் வேறு எதுவுமில்லை.

அந்தளவுக்கு அபத்தமாகவும், பல நேரங்களில் சமூகத்துக்கு ஆபத்தாகவும் இருக்கும்.

விஷால் நடித்துள்ள துப்பறிவாளன் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவிலும் இப்படிப்பட்ட பேச்சைக் கேட்க முடிந்தது.

துப்பறிவாளன் படத்தின் தயாரிப்பாளரான நந்தகோபாலுக்கு என்ன நிர்ப்பந்தமோ… தன்னுடைய பேச்சி அநியாயத்துக்கு விஷாலை புகழ்ந்து தள்ளினா

இதெல்லாம் அடுத்த படத்தின் கால்ஷீட்டுக்கான அச்சாரம் என்று அலட்சியப்படுத்திவிடலாம்தான்.

அப்படி செய்ய முடியாத அளவுக்கு ஒரு ஒப்பீட்டை செய்தார் நந்தகோபால்.

“விஷால் சார் சினிமாத்துறைக்கு சேவை பண்றதுக்காகவே பிறந்திருக்கார். ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைக்கிறார். காமராஜர் சார் மாதிரியே விஷால் சாரும் கல்யாணம் பண்ணிக்காமல் இருக்கிறார்” என்று பேசிக்கொண்டே போக, மேடையிலிருந்து சுசீந்திரன், பாண்டிராஜ், மிஷ்கின் உட்பட அனைவருமே வாய்விட்டு சிரித்தனர். விஷாலுக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

பிறகு பேச வந்த விஷால் துப்பறிவாளன் படம் பற்றி பேசிவிட்டு, நந்தகோபால் பேச்சு குறித்து தன்னுடைய விளக்கத்தை சொன்னார்…

“நான் காமராஜர் அய்யாவின் வழியில் நடப்பேன். அதாவது நேர்மையாக இருப்பேன். ஆனால் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வேன். இதுக்கு நான் பதில் சொல்லலைன்னா…. என் அப்பா அம்மா சும்மாவிட மாட்டாங்க. அவங்க கேக்கலைன்னாலும் லட்சுமிகரமான நிறைய பேர்… நிறைய பேர் இல்லை. ஒருத்தர் சும்மா இருக்க மாட்டாங்க. அதனால கண்டிப்பாக விரைவில் திருமணம் செய்வேன்.”

விளையாட்டாக விஷால் இப்படி பேசினாலும், தனக்கும் வரலட்சுமிக்கும் இடையிலான உறவையும்…வரலட்சுமியே வருங்கால மனைவி என்பதையும்… காமெடியாக கன்வே செய்துவிட்டார்.

Comments

comments