சென்னை: அரசியல் விவகாரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கமல் ஹாஸன் ஓவர்டேக் செய்துவிட்டார்.

அரசியலுக்கு வருவதாக மறைமுகமாக கூறினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் தனிக்கட்சி துவங்கக்கூடும் என்று ஆளாளுக்கு பேசினார்கள். இந்நிலையில் உலக நாயகன் கமல் ஹாஸன் தமிழக அரசை ட்விட்டரில் லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கி வருகிறார்.

இதையடுத்து அனைவரும் ரஜினியை மறந்துவிட்டு கமலை பற்றியே பேசுகிறார்கள்.

ஆண்டவரே

ரஜினி வரும்போது வரட்டும் நீங்கள் முதலில் அரசியலுக்கு வாங்க ஆண்டவரே என்று ஆளாளுக்கு கமல் ஹாஸனிடம் ட்விட்டரில் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

24-1500875488-kamal-haasan24

கமல்

கமல் ஹாஸன் தமிழக அரசை வந்து பார் என்பது போன்று ட்விட்டரிலேயே செமயாக விளாசுகிறார். அரசுக்கு பதிலடி கொடுக்க நான் போதும் நீங்கள் போஸ்டர் ஒட்டி பணத்தை வீணடிக்க வேண்டாம் என்று ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார் கமல்.

24-1500875474-kamal-hassan4545 (1)

பாஜக

பாஜக தலை கீழாக நின்றாலும் கமல் ஹாஸனை தங்கள் பக்கம் இழுக்க முடியாது. அதனால் தான் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பயத்தில் கமலை விமர்சிக்கிறார் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

24-1500875496-kamal-bigg-boss3423

சசிகலா

பிக் பாஸ் வீட்டில் பேசிய கமல் ஹாஸன் வெளியே வேற ஃபை ஸ்டார் ஜெயில் இருக்கிறது என்று சசிகலாவை பற்றி தெரிவித்துள்ளார். கர்நாடக சிறையில் சசிகலா அனைத்து வசதிகளுடனும் சொகுசாக வாழ்வதை தான் கமல் அப்படி விமர்சித்துள்ளார்.

Comments

comments