_18494 (1)

சமீபகாலமாக பிரபலமில்லாத நடிகர்களின் படங்களை வாங்க டிவி சேனல்கள் முன்வருவதில்லை. அதேசமயம் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களை வாங்க சில பிரபல சேனல்கள் போட்டி போடுகின்றன. அதுவும் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே முந்திக்கொள்கின்றன. அந்த வகையில், சிவகார்த்திகேயன் நடித்து வரும் வேலைக்காரன் படத்தை விஜய் டிவி வாங்கியிருப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்நிறுவனமே அறிவித்திருந்தது.இந்த நிலையில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி-அக்சய்குமார் நடித்துள்ள 2.ஓ படத்தின் உரிமையை ரூ.110 கோடிக்கு ஏற்கனவே ஜீ தமிழ் சேனல் நிறுவனம் வாங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் சார்ட்டிலைட் உரிமையையும் அந்நிறுவனம் ரூ. 30 கோடிக்கு வாங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Comments

comments