_18494 (1)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம் பேசிய சேரி பிஹேவியர் என்ற வார்த்தைக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்யயும் சிலர் ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் காயத்ரியின் தாய் கிரிஜா, இதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது… “நான் நேற்று தான் அமெரிக்காவில் இருந்து வந்தேன். காயத்ரியை பார்க்க என்னை கூட அனுமதிக்கவில்லை. காயத்ரி மீது ஏன் இவ்வளவு விமர்சனம் வைக்கிறார்கள் என்று தெரியவில்லை. வெளியே நடப்பது அவருக்கு தெரியாது. அவரும் ஒரு பெண் தான். ஒரு பெண்ணை இந்தளவுக்கு கேவலப்படுத்தாதீர்கள், ஒரு தாயாக எனது மனநிலையை யோசித்து பாருங்கள். காயத்ரி சொன்ன வார்த்தை யாரையாவது காயப்படுத்தியிருந்தால் அவருக்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Comments

comments