[

தமிழ்த்திரையுலக பிரபலங்களின் பெயரில் போலியான டுவிட்டர் கணக்குகள் ஏராளம் உள்ளன. இதுபோன்ற போலி கணக்குகளினால் சர்ச்சை எழுந்து, நட்சத்திரங்களுக்கு பிரச்சனை ஏற்படுகின்றன. கடந்த காலங்களில் சூரி உட்பட பலர் இப்படிப்பட்ட பிரச்சனைகளை சந்தித்துள்ளனர். இந்த வரிசையில் இப்போது இயக்குநர் பிரபுசாலமன்.

“நாயகிகள் – ஒரு நாள் சம்பளம் 85,000 + 2 கோடி சம்பளம் + டிரைவர், ஏசி கேரவன். ஆனால் ஒரு நாள் 5 மணி நேரத்துக்கு மேல் நடிக்க மாட்டார். பெரிய நடிகரின் மகள்” என்று அவருடைய பெயரில் இயங்கிவரும் போலி டுவிட்டர் பக்கத்தில், ஒரு ட்வீட் வெளியிடப்பட்டது.

அந்த நடிகை ஸ்ருதிஹாசன் என்று குறிப்பிட்டு அந்த பக்கத்தை பின் தொடர்பவர்கள் டுவீட் செய்தனர். இதனால் சர்ச்சை உருவானது.

தன்னுடைய பெயரில் டுவிட்டரில் சர்ச்சைகள் எழுப்பப்பட்ட தகவல் அறிந்ததும், “எந்தவொரு சமூக வலைதளத்திலுமே நான் கிடையாது. தற்போது கும்கி 2 படத்துக்கான திரைக்கதை இறுதி செய்வதிலும், நடிகர்களை இறுதி செய்வதிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார் பிரபுசாலமன்.

ஏற்கனவே வெளியான படங்களின் தோல்வியால் டென்ஷனில் இருக்கும் பிரபு சாலமனுக்கு இந்த விவகாரம் மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

Comments

comments