_18494 (1)

ஜல்லிக்கட்டில் பொழுது போக்குக்காக வந்து கத்தியதன் மூலம் பிரபலமானவர் ஜுலீ. இவர் பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகி வருகிறார்.

சில நாட்களுக்கு முன் இவரிடம் நடிகர் கமலஹாசன் நீங்கள் எதனை மிகவும் மிஸ் பண்ணுறீங்க என்று கேட்டதற்கு.

நான் என்னுடைய வேலையை தான் மிகவும் மிஸ் பண்ணுகிறேன் என்றும், யாரை பார்த்தாலும் ஊசி போட வேண்டும் என தோன்றுவதாக கூறி இருந்தார்.

இதற்கு இடையே ஆர்த்தியிடம் நீங்கள் ஜுலி மீது வைத்திருந்த அபிப்ராயம் மாறிவிட்டதா? என கேட்டதற்கு.

தற்போது தன்னுடைய எண்ணத்தில் சிறு மாற்றம் உள்ளதாகவும். நான் ஜுலீ மீது கோபப்பட்டது நான் மிகவும் புனிதமாக நினைக்கும் செவிலியர் வேலையை கூட விட்டு விட்டு VJ ஆக ஆசை படுவதாக கூறினார்.

அவர் தங்களிடம் பொய்யாக நடந்து கொண்டது தெளிவாக தெரிந்ததால் தான் நான் அவரிடம் கோபப்பட்டேன் என கூறினார்.

இதில் இருந்து ஜுலி பொய் வேஷம் போடுவதாக உறுதியானது. மேலும் தான் செவிலியர் என்பதற்காக பெருமைப்படுவதாக கூறும் ஜுலி.

சில மாதங்களுக்கு முன் பிரபல தனியார் தொலைக்காட்சியிலும் வேலை செய்துள்ளாராம். சமீபத்தில் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார் என்றும் கூறப்படுகிறது.

Comments

comments