_18494 (1)

வலிக்காத அரசியலில் வாயை மட்டுமல்ல, காலை வைக்கவும் அஞ்சாதவர் சத்யராஜ். நாட்டில் எவ்வளவோ அநியாயங்கள் நடந்தாலும், குறிப்பிட்ட ஒரு சில பிரச்சனைகளுக்காக மட்டுமே குரல் கொடுக்கும் வித்தியாச விந்தை மனிதர். “சீமானும் அமீரும் சேரனும் சிறைக்கு போன நேரத்தில், எப்படிய்யா சத்யராஜ் மட்டும் தப்பித்தார்?” என்றெல்லாம் மக்கள் கேள்வி கேட்காததன் விளைவு? இப்போது சத்யராஜின் வாய்க்குள் சதுர கிலோ மீட்டர் அளவுக்கு சவடால்!

பொதுவாகவே லைக்கா நிறுவனம் மீது ஒரு எரிச்சல் இருக்கிறது தமிழ் நாட்டு தமிழர்களுக்கு. ஆனால் ரஜினி படமோ, விஜய் படமோ லைக்கா நிறுவனத்தால் வந்தாலோ, உருவானாலோ அதையெல்லாம் மறந்துவிட்டு கைதட்டுவார்கள் அதே தமிழர்கள். இப்போதும் உதயநிதி நடிக்க, கவுரவ் இயக்கும் ஒரு புதிய படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறது லைக்கா. இதில் உதயநிதி அறிமுகமாகும் காட்சியில் அவருக்கு ஒரு பின்னணி குரல் கொடுக்க வேண்டும் என்று விரும்பினாராம் கவுரவ்.

சத்யராஜ் குரல் கொடுத்தால் இன்னும் டாப்பாக இருக்குமே என்று நினைத்தார். புரட்சித்தமிழனை அணுகியபோது, எடுத்த எடுப்பிலேயே மாட்டேன் என்றாராம். ஏன்?

லைக்கா நிறுவனம் புலிகளுக்கு எதிரான நிறுவனம். அதுமட்டுமல்ல. புலிகளையும் அப்பாவி தமிழர்களையும் கொன்ற ராஜபக்சேவுடன் தொடர்புடைய நிறுவனம். அதனால் முடியாது என்றாராம்.

வெளியூர் தொப்புள் கொடி உறவுக்காக உள்ளூர் உதயநிதியின் உறவையை வெட்டி வீசிட்டாரே, திமுக ஆட்சியில இருந்தா இப்படியெல்லாம் நடக்குமா என்று கலங்குகிறது உதயநிதி தரப்பு.

நமக்கென்ன தெரியுமாம்?

Comments

comments