NTlrg_20170702130645439608

நடிகை கே.ஆர்.விஜயா, பழம்பெரும் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இருவரும் இணைந்து ஒரு உலக சாதனையை நிகழ்த்த்தினார்கள். கே.எஸ்.கோபால கிருஷ்ணன் அதிகம் இயக்கிய நடிகை கே.ஆர்.விஜயா. சாதனை அதுவல்ல.கே.ஆர்.விஜயாவை சினிமாவில் அறிமுகப்படுத்தி அவரது முதல் படமான கற்பகத்தை இயக்கியவர் கோபால கிருஷ்ணன். சாதாரண ரிக்கார்ட் டான்ஸ் கலைஞராக இருந்தவரை ஹீரோயின் ஆக்கினார்.

அதன் பிறகு கே.ஆர்.விஜயா வளர்ந்து பெரிய நடிகை ஆனார். அவரது 100வது படமான நத்தையின் முத்து படத்தை இயக்கியவரும் கே.எஸ்.கோபால கிருஷணன்தான். அதுமட்டுமல்ல அவரது 200 வது படமான தேவியின் திருவிளையாடல் படத்தை இயக்கியதும், 250வது படமான மகாசக்தி மாரியம்மனையும், 300வது படமான படிக்காத பண்ணையார் படத்தை இயக்கியதும் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்தான். இது யதேச்சையாக அமைந்ததா. அல்லது கே.ஆர்.விஜயா தனது முக்கியமான படங்களை கே.எஸ்.கோபால கிருஷ்ணன் இயக்குமாறு பார்த்துக் கொண்டாரா என்று தெரியவில்லை.ஆனால் இது ஒரு உலக சாதனை. இந்த சாதனை படைத்த இயக்குனர், நடிகை யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

comments