NTlrg_20170707105742406379

1951ம் ஆண்டு வெளிவந்த படம் சர்வாதிகாரி. எம்.ஜி.ஆர், அஞ்சலிதேவி, எம்.என்.நம்பியார், சாண்டோ சின்னப்பா தேவர், புளிமூட்டை ராமசாமி, வி.கே.ராமசாமி, சித்தூர் நாகய்யா என பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்த படம். எஸ்.தட்சினாமூர்த்தி இசை அமைத்திருந்தார். மார்டன் தியேட்டர்ஸ டி.ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கினார்.

எம்.ஜி.ஆரின் நடிப்பில் மந்திரிகுமாரி படத்தை தயாரித்த டி.ஆர்.சுந்தரம் அதில் எம்.ஜி.ஆரின் வாள் சண்டை, ஸ்டைல் பார்த்து மிரண்டு போனார். எம்.ஜி.ஆரிடம் இருக்கும் சண்டை திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் ஒரு படம் தயாரிக்க விரும்பினார். அப்போது ஹாலிவுட்டில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த கேலண்ட் பிளேட் என்ற படத்தை தழுவி ஒரு படத்தை இயக்க முடிவு செய்தார். அதற்கு முதலில் வீரவாள் என்று பெயர் வைக்கப்பட்டது. பின்னர் சர்வாதிகாரி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஹாலிவுட் படத்தின் கேரக்டர்கள் அணிந்திருந்தது போன்ற உடைகள், ஹாலிவுட் படத்தில் வந்த மாதிரியே சண்டை காட்சிகள், போர்காட்சிகளை அமைத்தார். படம் பெயரிய வெற்றி பெற்றது.

Comments

comments