NTlrg_20170705115350778897

கருப்பு வெள்ளை காலத்தில் தனிப்பெரும் நடிகராக விளங்கியவர் எஸ்.வி.ரங்காராவ். ஒரு கதையில் அழுத்தமான அப்பா கேரக்டர் இருந்தால் அதற்கு எஸ்.வி.ரங்காராவை முதலில் ஒப்பந்தம் செய்த பிறகே ஹீரோ, ஹீரோயின்களை தேடிச் செல்வார்களாம். அந்த அளவுக்கு அவரது நடிப்பு பிரபலம். எஸ்.வி.ரங்காராவ் நடித்திருந்தால் அது குடும்பத்துடன் பார்க்க வேண்டிய தரமான படம் என்பது அப்போது அவருக்கு இருந்த இமேஜ்.

ஒரு கேரக்டரில் நடிக்கும்போது அந்த கேரக்டராகவே மாறிவிடக்கூடியவர். படப்பிடிப்பு தளங்களில் கூட அப்படித்தான் இருப்பாராம். ஓவர் ஆக்டிங் என்கிற நாடகத்தனமான நடிப்பு இருந்தபோது சினிமாவில் யதார்த்தமாக பேசி நடித்த முதல் நடிகர். வில்லனாக நடித்தால் கொடூர வில்லனாக நடிப்பார், குணசித்திர கேரக்டரில் நடித்தால் இவரைப்போன்ற அப்பா வேண்டும். இவரைப்போல மாமானார் வேண்டும் என்று ஏங்க வைத்து விடுவார். புராணப் படங்களில் எந்த கேரக்டரில் நடித்தாலும் அந்த கேரக்டராகவே மாறிவிடுவார்.

தனது உயர்ந்த நடிப்பாற்றலால் அன்னை, சாரதா, நானும் ஒரு பெண், கற்பகம், நர்த்தனசாலா(தெலுங்கு) ஆகிய 5 படங்களுக்காக சிறந்த குணசித்திர நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். 1968-க்கு முன்பு வரை தேசிய விருது, ராஷ்டிரபதி விருது என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்தது.

தெலுங்கில் சதுரங்கம், பாந்தவயலு என்ற இரண்டு படங்களை இயக்கினார் இரண்டுமே ஆந்திர அரசின் நந்தி விருதினை பெற்றது. குறுகிய காலத்தில் 160 படங்களுக்கு மேல் நடித்த எஸ்.வி.ரங்காராவ் தனது 56வது வயதிலேயே காலமானார்.

Comments

comments