_L6A0021(1)_11478

ராமராஜன் நடித்த ‘என்னப் பெத்த ராசா, என் ராஜாங்கம், ஊரெல்லாம் உன் பாட்டு போன்ற திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சிராஜ் நேற்றிரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 65.

சென்னை அசோக் நகரில் வசித்து வந்த சிராஜ், கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்ததாகவும், சிகிச்சையின் பலனின்றி நேற்றிரவு அவர் மரணம் அடைந்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

சிராஜ் அவர்களுக்கு திரையுலகினர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவருடைய இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறவுள்ளது.

Comments

comments