_L6A0021(1)_11478

அண்ணே சவுக்கியமாண்ணே என்ற யதார்த்த பேச்சால், நகைச்சுவை நடிப்பில் தனி முத்திரையை பதித்து வருபவர் நடிகர் கஞ்சா கருப்பு. 300 சினிமாக்களை தொட இருக்கும் நிலையிலும் யாரையும் மரியாதையாக வாங்கண்ணே! என்ன சொல்லுதீங்கண்ணே! என்ற வஞ்சனையில்லா வார்த்தை உச்சரிப்புகளால் யாரையும் வசப்படுத்தும் திறமைமிக்கவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதி வரை இருப்பார் என்ற நிலையில் மூன்றாவது ஆளாக வெளியேறிய கஞ்சா கருப்பு, சொந்த ஊர் சிவகங்கை கட்டாணிப்பட்டிக்கு அம்மாவை பார்க்க வந்திருந்தார். கிடைத்த ஓய்வு நேரத்தில், தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறந்ததாவது…

படவாய்ப்பு இல்லாததால் பிக் பாஸ் சென்றீர்களா ?என்னண்ணே சொல்லுதீங்க… வெண்ணிலா கபடி குழு 2, சந்தனத்தேவன், கிடா விருந்து என படங்கள் போயிட்டு இருக்குண்ணே. பார்க்கனும் போலிருக்கு படம் கூட சமீபத்தில் வெளியாயிருக்கு… நிறைய படங்கள் கையில் இருக்குண்ணே.

பிக் பாஸிலிருந்து வெளியே வந்தீட்டீங்களே?ஏதோ நான் வெளியே வந்த மாதிரி பேசுறாங்க. ஓட்டுக்கள் சேரலை என வெளியே அனுப்பிட்டாங்க. நான் வந்ததை மக்கள் தெளிவா கேட்டு வருகிறார்கள். கணேஷ்வெங்கட்ராம் இருக்க வேண்டுமா? வேண்டாமா? ஜூலி இருக்க வேண்டுமா? வேண்டாமா? என ஏதோ ஒரு நம்பரை கொடுத்து மக்களிடம் கேட்கிறார்கள். மக்கள் யாரும் எனக்கு ஓட்டு போடலை எனக் கூறி வெளியில் அனுப்பிடாங்க. களங்கமில்லா மனிதனான என்னை வெளியில் அனுப்பிட்டாங்கன்னு மக்கள் பேசிக்கிறாங்க.

உங்களுக்கு ஓட்டுக்கள் கிடைத்திருக்காதா?எனக்கு நம்பிக்கையில்லை. மக்கள் என் மீது பாசம் இல்லாமல் இருக்க மாட்டார்கள். வெளியில் வந்ததிலிருந்து நிறைய பேர் பேச முயற்சிக்கின்றனர்.

நடிகர் கமல் எதுவும் கூறினாரா?அவர் அவரு வேலையை பார்க்க வந்திருக்காரு… நான் என் வேலையை பார்க்க போயிருக்கேன். இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது.

குடும்பத்தை பிரிந்தது?இது ஒன்னும் பெரிசா படவில்லை. சினிமா சந்தர்ப்பத்திற்காக சென்னைக்கு பாலா அண்ணன், அமீர் அண்ணன் அலுவலகத்திற்கு போவேன். அவங்க ஏதாவது விஷயமாக என்னை மதுரை அனுப்புவாங்க. இரவு புறப்பட்டு மறுநாள் காலை மதுரை வந்து, அவங்க வேலையை முடித்துட்டு அன்றிரவே சென்னைக்கு சென்று விடுவேன். இப்ப எல்லாம் வீட்டுல இருக்குற நாட்கள் குறைவு தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சி கற்று கொடுத்த பாடம்?நல்ல பழக்கவழக்கங்களை கத்துகிட்டேண்ணே… என் குடும்பத்தின் மீது அக்கறை செலுத்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு இருக்குண்ணே. என் மனைவி, குழந்தைகளை அம்மாவை நம்பி விட்டுட்டு போயிடுவேன். பொதுவாக நான் எல்லோரிடமும் நெருங்கி பழகிவிடுவேன். யாரையும் எதிரியாக நினைத்தது கூட இல்லை.

நடிகர் பரணியுடன் என்ன தான் பிரச்னை?நுாறு நாள் கழித்து நமீதா, காய்த்ரி, ரைஸ்ஷா, வையாபுரி, சினேகன், சக்தி வாக்குமூலம் கொடுப்பார்கள். அப்ப நான் நல்லவனா இல்லையா என தெரிய வருமுண்ணே…

தனி வீட்டில் இருந்தது?உள்ளே பெண்களுக்கு பூந்தோட்ட காவல்காரனாக இருந்துள்ளேன். யாரையும் யாருடனும் பேச விட மாட்டேன். இந்த நேரத்தில் இங்கு என்ன நீக்கிறீங்கன்னு, என கேட்டு அனுப்பி வைப்பேன். ஆனால் பரணி நின்னு யாருடனாவது பேசிக்கிட்டு இருப்பார்.

மருத்துவமனை கட்டும் லட்சியம்?நான் நினைத்தது எங்கண்ணே நடந்திருக்கு… பள்ளி கட்டடம் கட்ட ஆசைப்பட்டேன். நடக்கலை. மருத்துவமனை கட்ட ஆசைப்பட்டேன். ஆனால் நான் வணங்கிற பழநிமுருகன், காளியாத்தா, சமயபுரத்தா இதற்கு ஒரு நாள் வழிவகுப்பாங்கண்ணே.- மேஷ்பா

Comments

comments