_18494 (1)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு இதுவரை தலைவராக இருந்த பாடலாசிரியர் சினேகன் பதவி நீக்கப்பட்டு புதிய தலைவராக காயத்ரி ரகுராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிக்பாஸ் விதிகளின்படி ஒருவர் ஒரு வாரத்திற்கு மட்டுமே தலைவராக இருக்க முடியும். அந்த வகையில் நேற்றுடன் சினேகன் தலைவர் பதவியேற்று ஒருவாரம் முடிந்துவிட்டதால் அவர் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

சினேகனுக்கு பதிலாக காயத்ரி ரகுராம் மற்றும் கணேஷ் வெங்கட்ராமன் புதிய தலைவருக்கான போட்டியில் பங்கேற்றனர். இதில் காயத்ரிக்கு 9 வாக்குகளும், கணேஷுக்கு 4 வாக்குகளும் கிடைத்ததால் 5 வாக்குகள் வித்தியாசத்தில் காயத்ரி வெற்றி பெற்று புதிய தலைவராக பொறுப்பேற்றார். தலைவர் பதவியில் போட்டியிட்ட கணேஷும் காயத்ரிக்கு ஓட்டு போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவர் பதவியேற்ற ஒருசில நிமிடத்தில் காயத்ரிக்கும் பரணிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது என்பதும் பரணியுடன் கஞ்சாகருப்பு, சக்தி ஆகியோர்களும் மோதிக்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அனேகமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அடுத்து வெளியேற போகிறவர் பரணியாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

comments