_18494 (1)

நடிகை பாவனா கடத்தப்பட்ட வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்களும், திகிலும், அதிர்ச்சியும் நிறைந்த காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.திலீப் முன் ஜாமீன்பாவனா கடத்தப்பட்டத்தற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று கூறிவந்த நடிகர் திலீப் அடுத்தடுத்த வெளியான ஆதாரங்கள், போலீசின் கிடுக்கிப்பிடி விசாரணையால் சந்தேக வளையத்துக்குள் வந்திருக்கிறார். தான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்பதால் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.படங்கள் முடக்கம்பாவனா கடத்தல் வழக்கையொட்டி திலீப் நடித்து வருகிற 7ந் தேதி வெளிவருவதாக இருந்த ராமலீலா படம் 21ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் அவர் நடித்து வந்த குமார சம்பவம், டிங்கன் 3டி படங்களின் படப்பிடிப்புகள் முடக்கப்பட்டுள்ளது. இதேப்போல காவ்யா மாதவன் நடித்து வந்த படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.பல்சர் சுனில் பகீர் தகவல்பாவனா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட பல்சர் சுனில் உள்ளிட்ட 7 பேர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது பல்சர் சுனிலை பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்க முற்பட்டனர். அதை போலீசார் தடுத்து நிறுத்தினர். என்றாலும் போலீஸ் காவலையும் மீறி பாவனா வழக்கில் “இன்னும் பல சுறாக்கள் சிக்கும்” என்று கூறினார். இந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.திலீப்பை நெருங்கும் போலீஸ்பல்சர் சுனில் பாவனாவைக் கடத்தும் முன், பின் பேசிய செல்போன் எண்களை ஆராய்ந்த போது, அதில் அதிக முறை திலீப்பின் மேலாளர் அப்புண்ணிக்குப் பேசியது அம்பலமாகியுள்ளது.அதிர்ச்சி காட்சிகள்பல்சர் சுனில் கொடுத்த தகவலின் பேரில் காவ்யா மாதவன் அலுவலகம், வீடு உள்பட பல இடங்களில் சோதனை நடத்தி மெம்மரி கார்டுகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

அதில் பாவனா கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட காட்சிகள் படமாகி உள்ளது. இந்த காட்சிகளை பல மெம்மரி கார்டுகளில் பதிவு செய்து அதை பலரிடம் கொடுத்து வைத்துள்ளார் சுனில். போலீஸ் உறுதிஇந்த வழக்கு கேரளா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருப்பதாலும் இந்த அளவிற்கு கொடுமைப்படுத்த பாவனா என்ன தவறு செய்துவிட்டார் என்கிற அனுதாபவமும் பரவியிருப்பதால் இந்த விஷயத்தில் போலீஸ் எதையும் மறைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கில் உறுதியாக இருந்து சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த போலீஸ் முடிவு செய்துள்ளது.

Comments

comments