0

சினிமாவில் பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் சுசித்ரா. அதோடு தனது டுவிட்டரிலும் அவ்வப்போது கருத்துக்களையும் பதிவிட்டு வருவார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுசித்ராவின் டுவிட்டரில் சில பிரபல நடிகர் நடிகைகளின் ஆபாச போட்டோ மற்றும் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

அதையடுத்து, அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யாரோ எனக்கு வேண்டாதவர்கள் தான் எனது டுவிட்டரை ஹேக் செய்து இந்த மாதிரி வீடியோக்களை எனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளனர் என்று சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

அதையடுத்து, கடந்த சில மாதங்களாக டுவிட்டர் பக்கமே தலைகாட்டாமல் இருந்து வந்தார் சுசித்ரா. அதோடு மீடியா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளிலும் அவர் தலைகாட்டுவதே இல்லை.

ஆனால் தற்போது மீண்டும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அது முன்பு வெளியானது போன்ற விவகாரமான வீடியோ அல்ல. அன்புள்ள மான்விழியே என்ற சூப்பர் ஹிட் பாடலை தனது குரலில் பாடி வெளியிட்டுள்ளார் சுசித்ரா. பல மாதங்களுக்குப்பிறகு சுசித்ரா டுவிட்டருக்கு வந்திருப்பதை அறிந்து பலரும் அவருக்கு பலத்த வரவேற்பு கொடுத்துள்ள நிலையில், அந்த வீடியோவும் வைரலாகியிருக்கிறது.

Comments

comments