தமிழ் சினிமா இந்த அளவிற்கு மோசமாகிப் போனதற்கு முக்கிய காரணம் திருட்டு விசிடியோ, இணையதளங்களில் திருட்டுத் தனமாக வெளியாவதோ மட்டுமல்ல நடிகர்களின் பல கோடி ரூபாய் சம்பளமும் ஒரு காரணம்.

தென்னிந்தியாவின் மற்ற மாநிலங்களில் கேளிக்கை வரியை ரத்து செய்திருக்கிறார்கள் என்று இங்கு சிலர் சொல்கிறார்கள். ஆனால், அங்கு எந்த ஒரு நடிகரும் எதிர்கால முதல்வர் ஆசையில் அரசியல் செய்வதில்லை. அப்படியே அவர்கள் அரசியல் செய்தாலும் அவர்கள் சார்ந்த துறைக்கு மட்டும் குரல் கொடுப்பதில்லை மக்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்கிறார்கள்.

இங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடந்தால் கூட முகத்தை மூடிக் கொண்டு சென்று கலந்துவிட்டு, பின்னர் அதையே மீடியாக்களுக்கும் அனுப்பி செய்தி வர வைப்பர்கள்தான் இங்குள்ள நடிகர்கள். ஒரு படம் ஹிட்டானாலே நடிகர்கள் எவ்வளவு கோடி ரூபாய் சம்பளத்தை உயர்த்துகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அது இப்போது ஸ்டார் ஆகியுள்ள சிவகார்த்திகேயன் வரை தொடர்வதுதான் சினிமாவில் இருக்கும் ஆபத்து. சிவகார்த்திகேயன் சம்பளமே 25 கோடி என்று சொல்லி அதிர்ச்சி கொடுப்பவர்களும் இங்கு இருக்கிறார்கள். அவரே ஏற்றத் தயாராக இல்லை என்றாலும் அவரை சுற்றியுள்ளவர்கள் ஏற்றிவிட்டுவிடுவார்கள்.

கேளிக்கை வரி விலக்கிற்கு இப்படி குரல் கொடுக்கும் சினிமாக்காரர்கள் அந்த வரி விலக்கை அவர்களே அனுபவித்து வந்ததுதான் இத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரு காரணம் என்கிறார்கள் சிலர். இத்தனை வருடங்களாக தமிழக அரசு வழங்கி வந்த வரி விலக்கு நியாயமாக பொதுமக்களுக்கு போய் சேர வேண்டும். ஆனால், அப்படி ஒரு சிஸ்டமையே செயல்படுத்தாமல் அதை திரையுலகினரே அனுபவித்து வந்தார்கள். இப்போது ஜிஎஸ்டியுடன், கேளிக்கை வரியும் தமிழக அரசு சேர்த்ததும் மக்களுக்காகத்தான் நாங்களும் ஸ்டிரைக் செய்கிறோம் என்பது எவ்வளவு கேலிக் கூத்தான ஒன்று என்கிறார்கள்.

இத்தனை வருடங்களாக வரிவிலக்கு அளிக்கப்பட்டதால் அரசாங்கத்திற்கு எவ்வளவு நஷ்டம் என்பதை யாராவது சிந்தித்து பார்த்திருப்பார்களா ?. இப்போது புதிதாக ஜிஎஸ்டி வரி விதிப்பை நாங்கள் எதிர்க்கவில்லை, தமிழக அரசின் கேளிக்கை வரி விதிப்பைத்தான் எதிர்க்கிறோம் என்கிறார்கள்.

தமிழக அரசின் கேளிக்கை வரி விதிப்பை எதிர்த்து நடிகர்கள் யாராவது குரல் கொடுப்பார்களா ?. குறிப்பாக, எதற்குமே கருத்து தெரிவிக்காத ரஜினிகாந்த், அஜித் உள்ளிட்டவர்கள் கேட்பார்களா என்கிறார்கள். ஏன், அவர்கள் மட்டும் மொத்தமாகவே கேட்பதற்கு யார் முன் வருவார்கள் ?.

இதன் மூலம் ரஜினிகாந்தை மத்திய அரசுக்கு எதிராகப் பேச வைக்கவும் தமிழக அரசியல் வட்டாரங்களில் நடப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Comments

comments