_L6A0021(1)_11478

ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் நடித்திருக்கிறார் ரஜினி. இதன் படப்பிடிப்பு முடிந்தது. இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில் படம் திரைக்கு வரவுள்ளது. அடுத்து, கபாலி இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் காலா படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இந்நிலையில் தனது அடுத்த படம் பற்றிய ஆலோசனையில் ஈடுபட்டிருக் கிறார் ரஜினிகாந்த்.

தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தை இயக்கிய வெற்றிமாறன் சமீபத்தில் ரஜினியை சந்தித்து கதை கூறினார். ரஜினிக்கு கதை பிடித்திருப்பதாக தெரிகிறது. ஆனால் இன்னும் நடிப்பது பற்றி இயக்குனர் உறுதி செய்யவில்லை. வெற்றிமாறன் தற்போது தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்தை இயக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் ஏற்கனவே ஆடுகளம், விசாரணை படங்கள் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

Comments

comments