_L6A0021(1)_11478

தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு ஆரம்பமான நாள் முதலே எதிர்ப்பு இருந்து வருகிறது. நேற்று கூட ஒரு எதிர்ப்பு எழுந்து அதற்கு கமல்ஹாசன் பதிலளித்துள்ளார். மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளவர்களும், வரம்பு மீறி செயல்படுவதாக பொதுமக்களும் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இட்டு வருகிறார்கள். இன்று அந்த எதிர்ப்பை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மற்றொரு போட்டியாளரான ஜுலி மீது ஆரம்பித்துள்ளார்கள்.

இதனிடையே, தெலுங்கில் நடிகர் ஜுனியர் என்டிஆர் தொகுத்து வழங்க உள்ள ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ஜுலை 16ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. அந்த நிகழ்ச்சிக்காக சில புரோமோக்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதில் ஒரு புரோமோவில் ஒரு ஓட்டை வழியாக பெண்களின் காலை பார்ப்பது போன்றும், பாத்ரூம் செல்ல வரிசை கட்டி நிற்பது போன்றும் காட்சிகள் வெளியானது.

இப்போது இந்த நிகழ்ச்சிக்கு தெலுங்கானா திரைப்பட வர்த்தக சபையின் தலைவரான ராமகிருஷ்ணா, தெலுங்கு கலாச்சாரத்திற்கு எதிரான இந்த நிகழ்ச்சியிலிருந்து ஜுனியர் என்டிஆர் வெளியேற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான ஜுனியர் என்டிஆர் பெண்களின் கால்களை ஒரு ஓட்டை வழியாகப் பார்ப்பது மோசமான ரசனை, ஏற்றுக் கொள்ள முடியாது என குற்றம் சாட்டியுள்ளார்.

ஆந்திர மாநிலத்தை ஆண்ட முன்னாள் முதல்வர் என்.டி.ஆரின் பேரன் இப்படியான நிகழ்சிககளை வழங்குவது ஏற்புடையதாக இல்லை என ஒரு சாரார் கூறி வருகின்றனர்கள்.

இந்நிலையில், முதற்கட்டமாக வெளியாகியுள்ள பட்டியலில் தமிழ் நடிகைகளான சினேகா மற்றும் ரம்பா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், சிலர் இதுவரை விளம்பரங்களில் மட்டுமே நடித்த பிரபலமானவர்கள்.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

big-boos-telug-contestants

Comments

comments