Thupparivaalan-1-1800x1199

விஷால் நடித்துவரும் ‘துப்பறிவாளன்’ படத்தில் இடைவேளைக்குப் பிறகு பாடல்களே கிடையாது என படக்குழுவினர் தெரிவித்தனர்.

எப்போதுமே மிஷ்கின் படத்தில் கதைக்கு முக்கியத்துவம் அளித்து, பாடல்களில் மிகவும் குறைவாகவே கவனம் செலுத்துவார். அதே போன்று தான் அவருடைய அடுத்த படமான ‘துப்பறிவாளன்’ படமும் அமைந்துள்ளது.

இதில் இடைவேளைக்குப் பின் பாடல்கள் இருந்தாலும், அதற்குப் பிறகு கதையோட்டத்தில் பாடல்கள் வைக்கும் இடம் எதுவுமே அமையவில்லையாம். மேலும், கதை மிகவும் வலுவாக இருப்பதால், கண்டிப்பாக மக்கள் ரசிக்கும்படி இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள்.

விஷால், வினய், பிரசன்னா, இயக்குநர் பாக்யராஜ், ரகுல் ப்ரீத் சிங், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

அரோல் கொரேலி இசையமைத்து வரும் இப்படத்துக்கு கார்த்திக் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் பிரதான காட்சிகள் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு, இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Comments

comments