NTlrg_20170707152655988883
நேரம் சரியில்லாவிட்டால் எதார்த்தமாக நடந்த விஷயங்கள் கூட வேண்டுமென்றே நடப்பது போல ஆகிவிடும். மலையாள நடிகர் திலீப் விஷயத்திலும் அதுதான் நடந்து வருகிறது.. நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வழக்கில் திலீப் மீது சந்தேக வலை அழுத்தமாக விழுந்துள்ளது.. அவரிடம் போலீஸ் விசாரணையும் நடைபெற்றுள்ளது.. சோஷியல் மீடியாவில் சிலர் இந்த நிகழ்வுகளை பற்றி சூசகமாக அதுவும் திலீப் நடித்த படங்களை வைத்தே கிண்டலடித்து வருகிறார்கள்.

ஜூலை-4, வெல்கம் டூ சென்ட்ரல் ஜெயில் ஆகியவை திலீப் படங்களின் டைட்டில்கள்.. இரண்டு தினங்களுக்கு முன் ஜூலை-4ஆம் தேதி என்பதால் அதனை குறிப்பிட்டு, இனி அடுத்தது ‘வெல்கம் ட்டூ சென்ட்ரல் ஜெயில்’ என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார் ஒரு சோஷியல் மீடியாவாசி.. இன்னொருவரோ, திலீப், காவ்யாமாதவன் ஆகியோர் மோகன்லால், சுரேஷ் கோபியுடன் இணைந்து நடித்த ‘கிறிஸ்டியன் பிரதர்ஸ்’ என்கிற படத்தின் சிறிய வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளார்..

அதில் திலீப் மோகன்லாலிடம், தனது புது மனைவியான காவ்யா மாதவனை காட்டி, “அண்ணே.. வீட்டிற்கு புதிதாக பெண் வந்த நேரம், ஐஸ்வர்யமும் சேர்ந்தே வந்துள்ளது” என கூறுவது போல இருக்கிறது.. அதாவது கடந்த வருடம் காவ்யா மாதவனை திலீப் திருமணம் செய்த பின்னர்தான் அவருக்கு இப்படி சோதனைகள் எல்லாம் நடக்கிறது என்பதாக கிண்டலாக டைமிங்காக குறிப்பிட்டுள்ளார் அந்த ரசிகர்

Comments

comments