NTlrg_20170701115436440884

எஸ்டி வரி விதிப்பு, மாநில அரசின் வரி விதிப்பு என இரு வரிகளால் தமிழ்நாட்டில் தியேட்டர் கட்டணங்கள் இன்று முதல் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கள் கிழமை ஜுன் 3ம் தேதி முதல் தமிழ்நாட்டில் தியேட்டர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடும் என நேற்று மாலை திடீரென அறிவித்தார்கள்.

ஜுன் 30ம் தேதியான நேற்று 7 படங்கள் வெளிவந்தன. வரும் ஜுலை 7ம் தேதியும் சில புதிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இனி வெளிவர உள்ள படங்களைக் கூட வெளியிடாமல் நிறுத்தி விடலாம். அவற்றை நிறுத்தினாலும் கூட ஓரளவிற்கு பாதிப்பு வரும். அதே சமயம் நேற்று வெளியான படங்கள் திங்கள் முதல் தியேட்டர்களில் திரையிடப்பட மாட்டாது என்றால் அதனால் ஏற்படும் நஷ்டங்களுக்கு யார் பொறுப்பாவார்கள்.

Comments

comments