NTLRG_20170729103210760713

ஒருபக்கம் ‘பிக்பாஸ்’, இன்னொருபக்கம் டுவிட்டரில் அரசியல் கருத்துக்கள் என ஒட்டுமொத்த ஊடகங்களையும் தன் பக்கம் திரும்ப வைத்திருக்கிறார் கமல். இதன் காரணமாக, தமிழகத்தையே தன்னுடைய ஒவ்வொரு அசைவுகளையும் கவனிக்க வைத்திருக்கிறார். இதற்கிடையில், விபத்து காரணமாக ரத்து செய்யப்பட்ட ‘சபாஷ் நாயுடு’ படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பை விரைவில் துவங்க உள்ளதாக அறிவித்துள்ளார் கமல்.

அதோடு, இன்னொரு பக்கம் ‘விஸ்வரூபம் 2′ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தையும் விரைவில் துவங்கவிருப்பதாக அறிவித்துள்ளார் கமல்.

‘தலைவன் இருக்கிறான்’ படத்தின் கதையை தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்ய இருப்பதாகவும் தகவல் அடிபடுகிறது. அப்படி மாற்றம் செய்வதன் மூலம் ‘தலைவன் இருக்கிறான்’ படத்தை தன்னுடைய அரசியல் பிரவேசத்துக்கு பயன்படுத்த கமல் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Comments

comments