_18494 (1)

பிக் பாஸ்’ ஆர்த்திதான் தற்போதைய டாக். இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறினார். ‘அப்பாவுக்காக, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்’ என உருக்கமாகப் பேசியவர் ஆர்த்தி. நூறு நாள் முடியாமல் ‘பிக் பாஸ்’ பற்றி பேசக் கூடாது என்பதால், பொதுவாக விசாரித்தோம்…

“என் அப்பா என்னை வீட்டுக்குள்ளயே அனுமதிக்கலை. வெளியில் போகச் சொல்லிட்டாரு. கணேஷூம் டைவர்ஸ் பண்ணிட்டாரு… இப்படி எழுதுங்க. ஏன்னா, உண்மையைச் சொன்னா சுவாரஸ்யம் இருக்காதே. அதனால், பொய் கலந்து எழுதுங்க. நான் சொன்ன விஷயம் எதுவுமே லைஃப்ல நடக்காதுனு தெரியும். இருந்தாலும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கணுமில்லையா?” எனச் சிரித்தவாறே பேச ஆரம்பிக்கிறார் ஆர்த்தி.

“நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்குச் சென்றதும் அப்பா என்ன சொன்னார்?” 

“ ‘நல்லவேளை முன்னாடியே வந்துட்டே சந்தோஷம்’னு சொன்னார். நான் நிகழ்ச்சியில் பேசினதும் நிஜத்துல நடந்துக்கிறதும் எப்பவுமே ஒரேமாதிரிதான். எனக்கு நிஜத்தில் நடிக்கத் தெரியாதுங்க. உண்மையா வாழணும் நினைப்பேன். எதிர்காலத்தில் நான் கண்ணாடியைப் பார்க்கும்போது, நடிச்சிருக்கோமேங்கிற குற்றஉணர்வு வந்துடக்கூடாது. மனசாட்சி எப்பவும் உறுத்தக்கூடாது. இது நிகழ்ச்சிக்காக மட்டுமல்ல; என்னை நான் சந்தோஷமா வெச்சுக்கிறதுக்கும் உதவும். இப்பவும் சொல்றேன், ஆர்த்தி எப்பவும் அப்பாவுக்கு நல்ல மகளாகவும், கணவருக்கு அன்பு மனைவியாகவும் இருப்பாள்.”

“ஏன் உங்களுக்கு அதிகமான நண்பர்கள் கிடையாது?” 

“நம்பிக்கையா இருக்கிறவர்களைத்தானே ஃப்ரண்ட்ஸா வெச்சுப்போம். எனக்கு எல்லாருமே போலியாத் தெரியுறாங்க. அதனால, நிறைய நண்பர்கள் இல்லை. உண்மையாக நடந்துக்கிறவங்ககிட்டே ஃப்ரண்ட்லியா இருப்பேன். அன்பைக் காட்டுவேன். அந்த உண்மையானவங்க இப்பவும் எப்பவும் என்கூட இருக்காங்க.”

”இனிமே வீட்டு வேலை, பாத்திரம் க்ளீன் செய்றதெல்லாம் தொடருமா?” 

”கண்டிப்பா பண்ணமாட்டேன். நான் ஏன் செய்யணும்? வீட்ல சமையல் செய்யறவங்க, வீட்டு வேலைப் பார்த்துக்கிறவங்க இருக்காங்க. நான் இந்த நிகழ்ச்சிக்குப் போய்ட்டுவந்ததால் அவங்களை வேலையைவிட்டு அனுப்பணுமா? அப்பா நல்லா சமைப்பார். எனக்குச் சாப்பிடணும்னு தோணுச்சுனா, அவர் கையால் சாப்பிடுவேன். எனக்குச் சமைக்கணும்னு தோணுச்சுனா அன்னிக்குச் சமைப்பேன்.”

“நீங்க எப்பவுமே இப்படித்தான் முகத்துக்கு நேரா பளிச்னு பேசுவீங்களா?” 

“நிகழ்ச்சியைப் பார்த்த எல்லாரும் நான் வேற மாதிரினு நினைக்கிறாங்க. அவங்க எல்லார்கிட்டேயும் நல்லவங்க என்கிற சர்டிபிகேட் வாங்கணும்னு நினைச்சிருந்தா, நூறு நாளும் நல்லாவே நடிச்சிருப்பேன். அப்படி எனக்குத் தோணலை. மனசாட்சிக்கு எதிரா நடிக்கத் தோணலை. இனிமேலும், இப்படித்தான் இருப்பேன். என்னை மாத்திக்க முடியாது.”

“கணேஷ் எப்படி ஃபீல் பண்ணினார்? இருபது நாள் பிரிவை அவர் தாங்கிட்டாரா?” 

“அதான் சீக்கிரமா வந்துட்டேனே அப்புறம் என்ன ஃபீலிங்? மாசக்கணக்கா ஷூட்டிங்ல இருந்திருக்கேன். அதனால், இந்தப் பிரிவு பெருசா தெரியலை. உள்ளே இருக்கும்போது ஐஸ்க்ரீமைத்தான் மிஸ் பண்ணினேன். வெளியில் வந்ததும் எல்லாரும் ஒண்ணா சேர்ந்து ஐஸ்க்ரீம் சாப்பிட்டோம். இனிமே, சினிமாவில் நடிக்க ஆரம்பிப்பேன்.”

aarthi_15322

“முன்னாடிவிட இப்போ உடல் எடை குறைஞ்சிருக்கா?” 

”அதெல்லாம் ஒண்ணும் குறையலீங்க. அங்கேயும் நல்லாவே சாப்பிட்டேன். சாப்பாட்டு விஷயத்தில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. இனிமேல்தான் வெயிட் பார்க்கணும்.”

“நிறைய மாத்திக்கணும்னு மத்தவங்க அட்வைஸ் பண்ணும்போது அதை ஏத்துகிறதில தப்பில்லையே…” 

“ஒரு விஷயம் எனக்குத் தப்புனு பட்டுச்சுனா நிச்சயமா மாத்திப்பேன். ஆனால், சரினு தோணுச்சுனா யார் சொன்னாலும் கேட்க மாட்டேன். என் கோபத்தை எப்போ கண்ட்ரோல் பண்ணனும் எனக்குத் தெரியும்”

“வேற ஏதாவது சொல்ல நினைக்கிறீங்களா?”

Comments

comments