3ni6usjZanit

நடிகர் தனுஷ்க்கு இளம் ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். சமீபத்தில் அவரின் பிறந்தநாளுக்கு ரசிகர்களில் அடித்த போஸ்டர்களில் தங்கமகனே, நாளைய நட்சத்திரமே என பல அடைமொழிகளோடு குறிப்பிட்டிருந்தார்கள்.

நகரின் பல பகுதிகளில் அதை வெகுவாக காண முடிந்தது. விரைவில் வரவிருக்கும் அவரின் வேலையில்லா பட்டதாரி 2 படத்திற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்.

3 மொழிகளில் வெளியாகும் அப்படத்தின் தேதி விரைவில் வெளியீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தின் விவேகம் வெளியான அடுத்த வாரம் விஐபி 2 வெளியாகலாம் என்பது சினிமா வட்டாரத்தின் கணிப்பு.

இந்நிலையில் ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக இன்று மாலை 6 மணிக்கு தனுஷ்,அனிருத் கம்போவில் உருவான விஐபி 1 படத்தை முன்னணி சேனலில் ஒளிபரப்புகிறார்கள்.

Comments

comments