0

‘விக்ரம் வேதா’ படத்துக்கு தணிக்கை அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியதைத் தொடர்ந்து, மறுதணிக்கைக்கு சென்றுள்ளது படக்குழு

மாதவன் – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘விக்ரம் வேதா’ படத்தை தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. தணிக்கை அதிகாரிகள் படத்தைப் பார்த்து ‘ஏ’ சான்றிதழ் வழங்கவே படக்குழு அதிர்ச்சியடைந்தது.

தற்போது மறுதணிக்கைக்கு சென்றுள்ளது படக்குழு. விரைவில் அப்பணிகள் முடிவடைந்து, ஜூலை 7-ம் தேதி வெளியீட்டுக்கு தயாராகி விடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.

புஷ்கர் – காயத்ரி இணை இயக்கியுள்ள இப்படத்தில் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், வரலெட்சுமி, ஷ்ரதா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பி.எஸ்.விநோத் ஒளிப்பதிவு செய்திருக்கும் படத்தை ஷிகாந்த் தயாரித்துள்ளார். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகள் மொத்த படப்பிடிப்பையும் படக்குழு முடித்துள்ளது. காவல்துறை அதிகாரியாக மாதவனும், தாதாவாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.

சமீபத்தில் ஷாருக்கான் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து வெளியிட்ட, இப்படத்தின் ட்ரெய்லருக்கு சமூகவலைத்தளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Comments

comments