‘டிக்:டிக்:டிக்’ பர்ஸ்ட் லுக் வெளியானது.. இந்தியாவின் முதல் விண்வெளி ஆராய்ச்சி படம்..
‘டிக்:டிக்:டிக்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தவுள்ளது படக்குழு.தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது படக்குழு.
சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஆரோன் அஜீஸ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். ஜெயம் ரவி மகன் ஆரவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஜபக் தயாரித்துள்ள இப்படத்துக்கு இமான் இசையமைத்து வருகிறார். முழுக்க விண்வெளியை மையப்படுத்தி தயாராகும் முதல் த்ரில்லர் படமாகும். பெரும் பொருட்செலவில் உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்டமான அரங்கு அமைத்து அதற்குள் நடைபெற்று வருகிறது.