_18494 (1)
கோலிவுட் திரையுலகம் தற்போது த்ரில்லர்+காமெடி டிரெண்டிங்கில் இருந்து வரும் நிலையில் இந்த டிரெண்டிங்கில் உருவாகியுள்ள இன்னொரு படம் தான் ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ என்ற படம்
அதர்வா, ரெஜினா, ப்ரணிதா, ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை இளவரசு ஓடம் இயக்கியுள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்க, ஸ்ரீசரவணன் ஒளிப்பதிவும், ப்ரவீண் கே.எல் படத்தொகுப்பும் செய்துள்ளனர். ஜூலை 14ஆம் தேதி வெளிவரவுள்ள இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த படம் குறித்து இயக்குனர் இளவரசு ஓடம் கூறியபோது, ‘காதலுக்கும், நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து இந்த படம் உருவாகிறது. பெண்களின் முதல் காதல் அவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அழுத்தமாகவும், உணர்வுப்பூர்வமாகவும், நகைச்சுவையாகவும் பதிவு செய்கிறோம்’ என்று கூறியுள்ளார்,.
இந்த படத்தில் நடித்தது குறித்து நடிகர் அதர்வா பேட்டி ஒன்றில் கூறியபோது, ‘எனக்கு ரொம்ப நாளா ரொமான்டிக் ப்ளஸ் காமெடிப் படம் ஒண்ணு  பண்ணணும்னு ஆசை. பல நாள் கதை கேட்கணும்னு நினைச்சு, ஒருநாள் முடிவா கேட்டேன். இயக்குநர் ஓடம். இளவரசு கதை சொல்ல ஆரம்பிச்ச பத்தாவது நிமிஷமே, `இந்தப் படத்தை நாம மிஸ் பண்ணிடக் கூடாது’னு தோணுச்சு. படம் பண்ணிட்டேன். இந்தப் படம் ஜாலி ட்ரீட்மென்ட்டா இருக்கும்’ என்று கூறினார்
இதுவ்ரை சீரியஸ் டைப் கதையில் நடித்து வந்த அதர்வா முதல்முறையாக நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு கதையில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ரசிகர்கள் எந்தமாதிரியான வரவேற்பு கொடுக்கின்றார்கள் என்பதை வரும் வெள்ளியன்று திரைவிமர்சனத்தில் பார்ப்போம்

Comments

comments