NTLRG_20170724163726871592

ஜிஎஸ்டி திரையரங்க கட்டணங்களுக்கும் அமல்படுத்தப்பட்ட பிறகு கடந்த மூன்று வாரங்களாகவே தியேட்டர்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. ஜுலை மாதம் 7ம் தேதி எந்தப் படங்களும் வெளியாகவில்லை. ஆனால், 14ம் தேதி வெளியான படங்களுக்கு பெரிய வரவேற்பு இல்லை. 21ம் தேதியும் ஏழு படங்கள் வரை வெளியானது. இந்தப் படங்களுக்கும் எப்படி வரவேற்பு இருக்குமோ என திரையுலக வட்டாரங்களில் கேள்வி இருந்தது.

ஆனால், வெளியான ஏழு படங்களில் ‘விக்ரம் வேதா, மீசைய முறுக்கு’ ஆகிய படங்கள் இளைஞர்களின் வரவேற்புடன் முதல் மூன்று நாட்களில் நல்ல வசூலைப் பெற்றதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘விக்ரம் வேதா’ படத்தில் விஜய் சேதுபதி, மாதவன் ஆகியோரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. ‘மீசைய முறுக்கு’ படம் முற்றிலும் இளைஞர்களுக்கான படமாகவே அமைந்துள்ளது.

இந்த இரண்டு படங்களும் ஜிஎஸ்டி வரி விதிப்பிற்குப் பிறகு அதிகமான தியேட்டர் கட்டணங்களையும் மீறி மக்களை வர வழைத்துள்ளது திரையுலகத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்ல படங்களைக் கொடுத்தால் கட்டணத்தையும் மீறி மக்கள் வருவார்கள் என்பதை அவர்களுக்குப் புரிய வைத்துள்ளது. அதை மற்றவர்களும் தொடர்ந்தால் மட்டுமே தொடர்ச்சியான வரவேற்பு இருக்கும்.

Comments

comments