Jk8R1S28kayatd

நீங்கள் இரண்டு பேர் மட்டும் தான் பிக் பாஸ் வீட்டில் உங்கள் மனதை பிரதிபளிக்கிறீர்கள் என்று கூறி, இன்று இருவருக்கும் ரிப்போர்டர் வேலையை செய்ய சொன்னார்.

இதனை ஓவியா மற்றும் காயத்ரி மிகச்சரியாக பயன்படுத்தி கொண்டார்கள்.

ஆனால், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரிடமும் பொதுவாக ஒரு கேள்வியை முன் வைத்தார்கள். அதாவது, காயத்ரிக்கும் , ஓவியாவுக்கும் வீட்டில் என்ன பிரச்சனை என்ற கேள்விதான் அது.

அந்த கேள்விக்கு அனைனவரும் சொல்லி வைத்தார் போல, காயத்ரி ஒரு சிறிய குழந்தை போன்றவர். அவருடைய மனது தங்கம் போன்றது. ஒருவரை அவருக்கு பிடித்து விட்டது என்றால் யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பி விடுவார். அவரிடம் இருக்கும் ஒரே பிரச்னை கோபப்படுவது.

அது அவரால் வருவது அல்ல, சிலர் சொன்ன பொய்களை உண்மை என நினைத்து கொண்டு கோபப்படுகிறாரே தவிர அவர் மிகவும் மென்மையானவர். தனிப்பட்ட முறையில் எங்கள் எல்லோருக்கும் காயத்ரி மேடத்தை ரொம்ப ரொம்ப பிடிக்கும். என ஓவியா உட்பட பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும்  கூறுகிறார்கள்.

இதிலிருந்து காயத்ரி மீது இருந்த தவறான பிம்பத்தை மாற்ற இந்த நிகழ்ச்சி வேண்டுமென்றே நடத்தப்பட்டதோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஏனென்றால், ஆர்ம்பத்திலிருந்தே தான் தான் பெரிய ஆள் என்று ஒரு லோக்கல் ரௌடி போல பேச்சுகளை அள்ளி வீசி வந்த காயத்ரியை இப்போது திடீரென ஆகச்சிறந்தவர் போல காண்பிப்பதை ரசிகர்கள் ஒப்புக்கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இதன் மூலம், வீட்டில் நடந்த அனைத்து பிரச்சனைக்கும் காரணம் ஜூலி தான் என்பது போலவும் காயத்ரிக்கு சம்பந்தமே இல்லை என்பது போலவும் ஒரு பிம்பத்தை இன்றையை பிக் பாஸ் நிகழ்ச்சி உண்டு பண்ணியிருக்கிறது.

Comments

comments