NTlrg_20170707073448194859

‘ஹன்சிகாவுக்கு, தற்போது, கோலிவுட்டில் சுத்தமாக மார்க்கெட் இல்லை’ என, கூறப்பட்டாலும், தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டு தான் இருக்கிறார். பிரபுதேவா ஜோடியாக நடித்துள்ள குலேபகாவலி திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதால், அதை மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார் ஹன்சிகா. இந்த படத்துக்கு பின், மீண்டும் தன் மார்க்கெட் சூடு பிடித்து விடும் என்பது, அவரது நம்பிக்கை. இதேபோல், பாலிவுட் படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வந்த பிரபுதேவாவும், இப்போது முழுநேரமாக நடிப்பு கோதாவில் குதித்துள்ளார். யங் மங் சங், குலேபகாவலி ஆகிய படங்களில் ஹீரோவாக நடிக்கிறார். ‘அவரது வேகத்தை பார்த்தால், படங்கள் இயக்குவதை, முற்றிலும் தவிர்த்து வருவதாகவே தெரிகிறது’ என்கின்றன, கோலிவுட் வட்டாரங்கள்.

Comments

comments