_L6A0021(1)_11478

ஹிந்தி நடிகரான விவேக் ஓபராய் முதன்முறையாக தமிழில் அஜித்தின் விவேகம் படத்தில் நடித்திருக்கிறார். சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் அவர் எந்த மாதிரியான வேடத்தில் நடித்திருக்கிறார் எனபது சஸ்பென்சாக உள்ளது. மேலும், இந்த விவேகம் படத்தில் நடித்தது பற்றி அவ்வப்போது ருசிகர தகவல்களை வெளியிட்டு வரும் விவேக் ஓபராய், அப்படத்தில் சண்டை காட்சிகள் ஹாலிவுட் ரேஞ்சுக்கு படமாக்கப்பட்டிருப்பதாகவும், பாலிவுட்டில் கூட இந்த அளவுக்கு பிரமாண்டம் இல்லை என்றும் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும், சிவா இயக்கத்தில் நடித்தது நல்லதொரு அனுபவமாக அமைந்தது. அந்த அளவுக்கு ஒரு சிறந்த டெக்னீசியனாக இருக்கிறார். அதனால் அவர் இயக்கும் படத்தில் ஒரு முறை நடித்தவர்களுக்கு மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசை தோன்றும். அதனால்தான் அஜித் கூட தொடர்ந்து மூன்று படங்களில் சிவா இயக்கத்தில் நடித்திருப்பதாக நினைக்கிறேன் என்கிறார் விவேக் ஓபராய்.

Comments

comments