‘வேலைக்காரன்’ படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை பொன்ராம் இயக்குகிறார். இதில் சமந்தா நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியது. சிம்ரன், சூரி உள்பட பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

 Samantha-Siva-640x426

சிவகார்த்திகேயன்- பொன்ராம் கூட்டணியில் உருவாகும் 3-வது படம் இது. படப்பிடிப்பு தொடங்கிய சில தினங்களிலேயே இதன் சேட்டிலைட் உரிமையை ஒரு டி.வி. நிறுவனம் பெரும் தொகை கொடுத்து வாங்கி இருக்கிறது.

சமந்தாவுக்கு அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பு தனது காட்சிகளை நடித்து கொடுக்கிறார்.

Comments

comments