_18494 (1)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா கிட்டத்தட்ட வெற்றி பெற்றுவிடுவார் என்று அனைவருக்குமே தெரிந்துவிட்டது. எனவே அவரை கார்னர் செய்து வெளியேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து முயற்சித்தனர். ஆனால் கமல் முன் அசிங்கப்பட்டதுதான் மிச்சம். ஓவியாவை மற்ற பங்கேற்பாளர்கள் கார்னர் செய்ய செய்ய அவருக்கு புகழ் அதிகமாகி கொண்டே வருகிறது.

இந்த நிலையில் ஓவியாவை இனி ஒன்றும் செய்ய முடியாது என்பதை புரிந்து கொண்ட பங்கேற்பாளர்கள் அடுத்ததாக ஆரவ் மற்றும் ரைசாவை கார்னர் செய்ய ஆரம்பித்துள்ளனர். ஓவியாவுக்கு மறைமுகமாக ஆரவ் உதவி செய்வதாக நினைத்து கொண்டு அவரையும் தனிமைப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள புரமோ வீடியோ ஒன்றில் ரைசா, சினேகனை எச்சரிக்கும் வகையில் கூறுவதாக அமைந்துள்ளது. ‘ஏய் போ என்று பேசுவதெல்லாம் எனக்கு பிடிக்காது, அப்படி என்னிடம் பேசாதிங்க என்று ரைசா சொல்ல அதற்கு சினேகன் தான் ஜாலியாகத்தான் சொன்னதாக கூற, ஜாலியாக சொல்லும்போது ஓகே, இருந்தாலும் அப்படி பேசுவது தனக்கு பிடிக்காது என்று கண்டிப்புடன் கூறியதால் தேவதைகளின் நாயகனான சினேகன் அப்செட் ஆகிவிட்டார்.

இதுகுறித்து சினேகன் வையாபுரியிடம் கூற, வையாபுரி நடந்தது என்ன என்பதை முழுவதும் அறியாமல் அவரும் ரைசாவை திட்டியதாக அந்த வீடியோவில் உள்ளது. கடைசியில் ரைசா சோகத்துடன் படுக்கையில் இருக்கின்றார். இறுதியில் ‘தப்பானவங்கன்னு நினைச்சவங்க நல்லவர் ஆகிவிடுவார்கள் என்றும், நல்லவர்கள் என்று நினைத்தவர்கள் தப்பானவங்களாகிவிடுவார்கள் என்றும் வையாபுரி சினேகனிடம் கூறுவது போல் இந்த புரமோ வீடியோ முடிந்துள்ளது. இந்த நிலையில் ரைசாவுக்கு ஓவியா ஆதரவு கொடுத்து தேற்றுவாரா? என்பதை இன்றைய  நிகழ்ச்சியில் பார்ப்போம்.

Comments

comments