_18494 (1)

மத்திய அரசு கொண்டு வந்துள்ள கேளிக்கை வரியால் சினிமா டிக்கெட் கட்டணங்கள் கடுமையாக உயரும் அபாயம் இருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசு உள்ளாட்சிகளுக்கு 30 சதவிகிதம் கேளிக்கை வரி செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்தியேன் நேற்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:

தமிழக அரசு 1939ம் ஆண்டின் தமிழ்நாடு கேளிக்கை வரி சட்டத்தை நீக்கி, தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரி சட்டத்தை இயற்றி உள்ளது. அது நாளை முதல் (இன்று) அமுலுக்கு வருகிறது. அந்த சட்டத்தின்படி அனைத்து கேளிக்கை நிறுவனங்களும் சென்னை மாநகராட்சியில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன்படி ஜூலை 1ந் தேதி முதல் கேளிக்கை வரியை செலுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதன்படி ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை திரைப்படத்துக்கான கேளிக்கை வரியை சென்னை மாநகராட்சியில் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments

comments