Dir-Parthiban-740x431

ஊழலில் திளைக்கும் தமிழக அரசுக்கு எதிராக தைரியமாக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.

அவரது போர்க்குரல் கண்டு நடுங்கிப்போயிருக்கும் தமிழக அமைச்சர்கள் கமலை ஒருமையில் பேசுகின்றனர்.

கமல் எனும் கலைஞனை சிறுமைப்படுத்துகிற இவர்களை சினிமாக்காரர்கள் கண்டிக்கவில்லை.

ஆளும்கட்சியின் அடிமையாகவே இருந்து பழக்கப்பட்ட படத்துறையினர் இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இப்படி சூடு, சொரணையற்றவர்களாக இருக்கப்போகிறார்கள்?

எடப்பாடி ஆட்சியில் கூட எழுந்து நடமாட முடியாத அளவுக்கு ஊனமுற்று கிடக்கும் இவர்களால் எப்படி நன்மை விளையும்?

இந்நிலையில்தான், “சினிமாவில் வரி விலக்கு அளிக்கிறேன் பேர்வழி என்று ஒவ்வொரு படத்திற்கும் தனிச்சான்றிதழ் வழங்க நடக்கும் லஞ்ச நாடகங்களுக்கு என்னை போல் வெகு சிலரைத் தவிர, மற்றவரெல்லாம் பயந்து உடந்தையாய் இருக்கின்றனர். இது என் குரல். துணிவுள்ள சினிமாக்காரர்கள் மட்டும் குரல் கொடுத்தாலே, அரசின் ஊழல் பாத்திரம் பொங்கி வழியும்”

என்று வரிவிலக்கு அளிக்க வாங்கப்படும் லஞ்சம் பற்றி வாய் திறந்தார் கமல்ஹாசன்.

இதன் பிறகும் கூட திரைப்படத்துறையினர் செவிடர்களாக, செத்த சவமாக கிடக்கிறார்கள்.

இந்நிலையில், கமல்ஹாசனுக்கு ஆதரவாக, நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தைரியக்குரல் எழுப்பியுள்ளார்…

“சினிமாவில் இருக்கும் பலருக்கு தைரியம் இல்லை. தங்கள் படங்களுக்கு பிரச்சனை வந்துவிடுமோ என்று பயப்படுகிறார்கள்.

பொதுமக்களே பயம் இல்லாமல் இருக்கும்போது, தகுதியோடு இருக்கிற ஒரு நடிகன் தவறை சுட்டிக்காட்டுவது வரவேற்கத்தக்கது.

‘கேளிக்கை வரி பிரச்சினையில் என் போன்ற வெகு சிலரை தவிர மற்ற எல்லோரும் லஞ்சம் கொடுத்து தான் வரிவிலக்கு பெற வேண்டியது இருக்கிறது’ என்று கமல்ஹாசன் கூறிய குற்றச்சாட்டு உண்மையானது.

இதற்கு முன்பு என் படத்துக்கும் பணம் கேட்கப்பட்டது. ஆனால் நான் கொடுக்கவில்லை.

எல்லா படங்களுக்கும் வியாபாரத்துக்கு தகுந்தவாறு ‘யு’ சான்றிதழ் கொடுத்த பிறகு, கேளிக்கை வரி விலக்கு பெற பணம் கேட்கப்படுகிறது.

பணம் கேட்பவர்கள் நேரடியாக வாங்காமல் சுற்றி வளைத்து கேட்கிறார்கள்.

திரையுலகினரும் படம் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டு நஷ்டம் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அச்சத்தில் பணத்தை கொடுக்க முன்வருகிறார்கள்.

இது இந்த ஆட்சியில் மட்டுமல்ல, கடந்த ஆட்சியிலும், அதற்கு முந்தைய ஆட்சியிலும் நடந்துள்ளது.”

என்று பார்த்திபன் தெரிவித்த பிறகும் கூட படத்துறையில் அமைதி நிலவுகிறது.

இப்படிப்பட்டவர்களுக்கு 28 சதவிகிதம் அல்ல 280 சதவிகிதம் கூட ஜி.எஸ்.டி. விதிக்கலாம் தப்பில்லை…

Comments

comments